Skip to content
Home » ஒடிசா விபத்து… புதுகையில் முதல்வர் ஸ்டாலின் பாராட்டு விழா ஒத்திவைப்பு…

ஒடிசா விபத்து… புதுகையில் முதல்வர் ஸ்டாலின் பாராட்டு விழா ஒத்திவைப்பு…

ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பாஹநாகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு 6:45 மணியளவில் சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கிட்டத்தட்ட 10 முதல் 12 பெட்டிகள் தடம்புரண்டு பக்கத்து தண்டவாளத்தில் விழுந்தன. இதனால் அந்த தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த யஷ்வந்த்பூர் ரயில் பெட்டிகள் மீது மோதியதால் அந்த ரயிலும் தடம்புரண்டது.

இந்நிலையில் தற்போது வரை ரயில் விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை288 ஆக அதிகரித்துள்ளதாக ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் ஜேனா தெரிவித்துள்ளார். 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 18க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் புதுக்கோட்டையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த பாராட்டு விழா ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாராட்டு விழா தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல் வௌியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!