Skip to content
Home » மாண்டலின் ஸ்ரீநிவாஸ் முதன்மைச் சாலை….. முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி…

மாண்டலின் ஸ்ரீநிவாஸ் முதன்மைச் சாலை….. முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி…

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இன்று (19.9.2023) தலைமைச் செயலகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வடபழனி, குமரன் காலனி பிரதான சாலைக்கு “மாண்டலின் ஸ்ரீநிவாஸ் முதன்மைச் சாலை” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்காக மாண்டலின் ஸ்ரீநிவாஸ் அவர்களின் தந்தை  சத்தியநாராயணா, தாயார்  காந்தம், சகோதரர்  மாண்டலின் ராஜேஷ், அவரது மனைவி ஹர்ஷா ராஜேஷ் ஆகியோர் சந்தித்து, நன்றி தெரிவித்துக் கொண்டனர்.  உடன் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர்  ஆர். பிரியா, துணை மேயர்  மு. மகேஷ் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!