Skip to content
Home » இசையமைப்பாளர் டிகே ராமமூர்த்தி நூற்றாண்டு விழா மலர்…முதல்வர் வெளியிட்டார்

இசையமைப்பாளர் டிகே ராமமூர்த்தி நூற்றாண்டு விழா மலர்…முதல்வர் வெளியிட்டார்

திருச்சியை சேர்ந்தவர்  இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தி.  இவர் தனியாகவும், எம்.எஸ். விஸ்வநாதனுடன் இணைந்தும் ஏராளமான  திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.  தற்போது இவரது நூற்றாண்டு  நிறைவு விழா நடந்து கொண்டிருக்கிறது.இதையொட்டி அவரது குடும்பத்தினர்”மலைக்கோட்டையில் தவழ்ந்த மெல்லிசை கலைமாமணி மெல்லிசை மன்னர் டி.கே. ராமமூர்த்தி” நூற்றாண்டு விழா மலரினை தயாரித்து உள்ளனர்.

டி.கே. ராமமூர்த்தி மகன்கள்  முத்துகுமார், சிவசுப்பிரமணியன், மகள்கள்  ராஜேஸ்வரி, ஜமுனா சிவசங்கரன்,  கல்யாணி மற்றும் குடும்பத்தினர், நூல் தொகுப்பாளர்  வாமணன் ஆகியோர் இன்று  சென்னை கோட்டையில்  முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து  நூற்றாண்டு விழா மலரை கொடுத்தனர். அந்த மலரை முதல்வர் வெளியிட்டார். அதை டிகே ராமமூர்த்தி குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.  அப்போது தலைமை செயலாளர் இறையன்பும் உடனிருந்தார்.

 


கோட்டையில் நடந்த மற்றொரு நிகழ்ச்சியில்,  கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான உறைவிந்து குச்சிகள் மற்றும் திரவ நைட்ரஜன் விநியோகம் செய்வதற்கான 16 வாகனங்களை வழங்கிடும் விதமாக 3 ஓட்டுநர்களுக்கு

வாகனங்களுக்கான சாவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் .அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் த.ந. கெளதமன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு,  கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை முதன்மைச் செயலாளர் ஆ.கார்த்திக்,  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தமிழ்நாடு முதலமைச்சர் முகஸ்டாலின்   தலைமைச் செயலகத்தில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பட்டுவளர்ச்சித் துறையின் சார்பில், பட்டு விவசாயிகள் மற்றும் பட்டு நூற்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவில் சிறந்த மூன்று பட்டு விவசாயிகள், சிறந்த மூன்று தானியங்கி பட்டு நூற்பாளர்கள் மற்றும் சிறந்த மூன்று பலமுனை பட்டு நூற்பாளர்களுக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசாக மொத்தம் 6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்

பரிசுத்தொகைக்கான காசோலைகளை 9 விருதாளர்களுக்கு வழங்கி சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில்,  குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் . தா. மோ. அன்பரசன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலாளர் ஜெ. விஜயா ராணி, பட்டு வளர்ச்சித்துறை  இயக்குனர்  தர்மேந்திர பிரதாப் யாதவ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!