Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை….

தமிழகத்தில் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர்  மு.க.ஸ்டாலின் மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில், (21, 22-ம் தேதி) இன்று மற்றும் நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை மண்டல கள ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் மாவட்ட வாரியாக முக்கிய திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும், மாவட்டங்களில் வளர்ச்சி பணிகள் குறித்தும் கலெக்டர்கள், அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார். ஒவ்வொரு கலெக்டர்களும் தங்களது மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து முதல்வரிடம்  தகவல் தெரிவிக்க உள்ளனர். மேலும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று ஆக்கப்பூர்வமான கருத்துக்களை வழங்க அதிகாரிகளுக்கு பள்ளி கல்வி இயக்குநர் அறிவுறுத்திள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!