Skip to content
Home » அப்துல் கலாம் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

அப்துல் கலாம் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

  • by Senthil

ராமநாதபுரம் மாவட்டத்தில்  2 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார். நேற்று கட்சி நிகழ்ச்சியில் லபங்கேற்ற முதலமைச்சர், இன்று மீனவர் நல மாநாடு மற்றும் மீனவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்றார்.

இதனிடையே, ராமநாதபுரத்திலிருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில்,   பாம்பன் ஊராட்சி, அக்காள்மடம் மீனவர் குடியிருப்பு பகுதிக்கு நேரில் சென்று, அங்குள்ள மீனவர் குடும்பத்தினருடன் கலந்துரையாடினார். இந்நிலையில், ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவிடத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு மரியாதை செலுத்தினார். முதல்வருடன் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, துரைமுருகன், ஐ.பெரியசாமி, ராஜகண்ணப்பன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள்  கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!