Skip to content
Home » திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் வாகனம் பஞ்சர்… பரபரப்பு…

திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் வாகனம் பஞ்சர்… பரபரப்பு…

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சி, கேர்  கல்லூரி வளாகத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் நடைபெறும் வேளாண் சங்கமம் 2023 மற்றும் 50,000 விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கும் விழாவில் பங்கேற்று பேசினார்.

பின்னர் கேர் கல்லூரியில் இருந்து திருவெறும்பூர் வழியாக தஞ்சை நோக்கி சென்ற முதல்வரின் வாகனம் துவாக்குடி பேருந்து நிலையம் பகுதியில் பஞ்சராகி நின்றது.

இந்த இடத்து வாகனங்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு முதல்வர் மு க ஸ்டாலின் , அமைச்சர் கே என் நேருவின் வாகனத்தில் தஞ்சை நோக்கி புறப்பட்டார். பின்னர் காண்வாய் வாகனம் பஞ்சர் ஒட்டப்பட்டு 20 நிமிடங்களுக்கு பிறகு துவாக்குடியில் இருந்து

புறப்பட்டு தஞ்சை நோக்கி சென்றது. முதல்வரின் காண்வாய் வாகனம் பஞ்சர் ஆகி நின்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பின்னால்  வந்து கொண்டிருந்த அமைச்சர்  கே. என். நேரு வாகனத்தில் ஏறி முதல்வர்  ஸ்டாலின் மீண்டும் பயணத்தை  தொடர்ந்தார்.

தஞ்சை சென்ற முதல்வருக்கு கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள், எம்.எல்.ஏக்கள் வரவேற்பு அளித்தனர். பொதுமக்கள் சாலையின் இருபுறமும் நின்று உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.  தஞ்சை மாவட்டம் மனையேறிப்பட்டியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பணிகளை  முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்துவிட்டு தஞ்சை சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!