Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சோனியா பிறந்த நாள்…. மு.க. ஸ்டாலின் வாழ்த்து

காங்கிரஸ்  தலைவர்களில் ஒருவரான  சோனியா காந்திக்கு இன்று 78வது  பிறந்தநாள்.  இதையொட்டி  சோனியாவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். பிரதமர் மோடி தனது   எக்ஸ் தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.

இது போல தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும்  எக்ஸ் தளத்தில்  வாழ்த்து தெரிவித்து உள்ளார்.அதில், “காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். வலிமையான சவால்களை வழிநடத்துவது முதல் கருணையுடன் வழிநடத்துவது வரை, அவரது பயணம் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாக நிற்கிறது. அவருக்கு வெற்றியும் அமைதியும் நிறைந்த நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ  வாழ்த்துகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!