Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சரத் யாதவ் மறைவுக்கு தமிழக முதல்வர் இரங்கல்

முன்னாள் மத்திய மந்திரியும், ஐக்கிய ஜனாதாதள கட்சித் தலைவருமான சரத் யாதவ் தனது 75-வது வயதில் நேற்று  அரியானா மருத்துவமனையில் காலமானார்.  அவரது மறைவுக்கு அனைத்து கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சரத் யாதவ் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஆர்.ஜே.டி தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சரத் யாதவ் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. தனது கடைசி மூச்சு வரை ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை என்ற இலட்சியங்களுக்கு ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் இருந்த மிக உயர்ந்த சோசலிச தலைவர்களில் ஒருவரை நாம் இழந்துவிட்டோம். எனது இதயப்பூர்வமான இரங்கல்கள்” என்று தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!