Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கூட்டணி ஆட்சியா? செங்கோட்டையன் பதில்

2026 சட்டமன்ற தேர்தலில்   தமிழ்நாட்டில்  அதிமுக, பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் என அறிவித்து உள்ளனர். இந்த நிலையில் கடந்த  வாரம் தமிழகம் வந்த  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,  தங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி என்று  கூறினார்.  இதற்கு அதிமுக தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால்  அமித்ஷா  கருத்துக்கு இதுவரை எடப்பாடி  பதில் அளிக்கவில்லை. இந்த நிலையில்,  அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான  செங்கோட்டையனிடம்  கோபிசெட்டிபாளையத்தில் கூட்டணி  ஆட்சி குறித்து  கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், இது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும் என்று மழுப்பி விட்டார்.  
error: Content is protected !!