கொகைன் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் தயாரித்த படத்தில் நடித்தபோது தான் இந்த போதை பழக்கம் ஏற்பட்டது. பிரசாத்திடம் பணம் கேட்டபோதெல்லம் அவர் கோகைன் தான் கொடுத்தார். அதை பயன்படுத்தி வந்தேன். 250 கிராமு்கும் அதிகமாக கோகைன் அவரிடம் வாங்கி உள்ளேன்.என்னைப்போல மேலும் பலருக்கும் அவர் கோகைன் கொடுப்பார். அந்த பழக்கம் எவ்வளவு பெரிய தவறு என்பதை இப்போது புரிந்து கொண்டேன்.இவ்வாறு அவர் கூறி உள்ளாராம். அதன் போில் இப்போது போலீசார் ஒரு நடிகர் உள்பட திரையுலகை சோந்த 4 பேரை தேடுகிறார்கள். நடிகர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அவரை தேடும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
போதை பொருள் வழக்கு: மேலும் ஒரு நடிகருக்கு போலீஸ் வலை
