விளைச்சல் குறைவால் தென்னை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெயில் மற்றும் வறட்சியால் தேங்காய் விளைச்சல் குறைந்துள்ள சூழலில், வெளிச்சந்தையில் கொப்பரை விலையும் சரிந்துள்ளதால் விவசாயிகள் கடும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர். எனவே மத்திய, மாநில அரசுகள் ‘நாபெட்’ வாயிலாகக் கிலோவுக்கு ரூ.180 ஆதரவு விலை வழங்கி, உச்சவரம்பு கட்டுப்பாடுகள் இன்றி விவசாயிகளிடம் உள்ள முழு கொப்பரையையும் கொள்முதல் செய்து தென்னை விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டும் எனச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தென்னை விவசாயிகள் கடும் பாதிப்பு: கொப்பரை கொள்முதலை துவங்க கோரிக்கை
