Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தூத்துக்குடி ரயில்வே ஸ்டேசனில் மாணவரிடம் செல்போன் பறிப்பு- வாலிபர் கைது!

தூத்துக்குடி ரயில்வே ஸ்டேசனில் மாணவரிடம் செல்போன் பறிப்பு- வாலிபர் கைது!

தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் வங்கித் தேர்வு எழுதச் சென்ற மாணவரிடம் செல்போனைப் பறித்துச் சென்ற வாலிபரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டம் மறவப்பட்டியைச் சேர்ந்தவர் இன்னாசி மகன் ஜெரோம் செபஸ்தியார் (23). இவர் வங்கித் தேர்வுக்குத் தயாராவதற்காகத் தூத்துக்குடியில் உள்ள பயிற்சி மையத்தில் தங்கிப் படித்து வருகிறார்.

தூத்துக்குடி சுற்றுலா வழிகாட்டி

கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறவிருந்த வங்கித் தேர்வை எழுதுவதற்காக, ரயிலைப் பிடிப்பதற்காக இரவு 10.30 மணியளவில் தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்திற்கு ஜெரோம் செபஸ்தியார் வந்துள்ளார். அப்போது அங்கு நின்றிருந்த 3 பேர் கொண்ட கும்பல், அவரிடமிருந்த செல்போனைப் பறித்துக் கொண்டு தப்பியோடியது.

இச்சம்பவம் குறித்து திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நெல்லை ரயில்வே எஸ்.பி (பொறுப்பு) இளங்கோ உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் செல்வி மேற்பார்வையில் குற்றப்பிரிவு ஏட்டு சரவணன், காவலர்கள் மாரிச்செல்வம், ஹரி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில், செல்போன் பறிப்பில் ஈடுபட்ட தூத்துக்குடி போல்பேட்டையைச் சேர்ந்த ஜெபஸ் (26) என்பவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த செல்போனையும் பறிமுதல் செய்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள மற்ற இருவரை ரயில்வே போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!