கோவையில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூர சம்பவம் தன்னை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளதாக முதல்வர் விஜய் பதிவிட்டுள்ளார். இத்தகைய மனிதநேயமற்ற, மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது எனவும் அவர் ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார். மேலும், 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவான விசாரணை செய்து உரிய தண்டனை பெற்றுத்தரப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
