Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை…கோதண்ட ராமர் பஜனை கோவிலில் புரட்டாசி மாத உற்சவம்… கோலாகலம்..

புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமை நேற்றுடன் நிறைவு பெற்றதை முன்னிட்டு விரதம் பிடித்தவர்கள் அனைவரும் நேற்றுடன் விரதத்தை முடித்துள்ளனர். இந்நிலையில் கோவை தடாகம் அடுத்த நெ.24 வீரபாண்டி பகுதியில் உள்ள ஸ்ரீ கோதண்டராமர் பஜனை திருக்கோயிலில் வருடாந்திர புரட்டாசி மாத உற்சவ நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சீதாலட்சுமி சமேத கோதண்ட ராமர்,

பொன்னம்மாள் சமேத ஸ்ரீ அட்டி தொட்டராயர், ஐயா சுவாமி ஆகிய மூன்று தெய்வங்களும் எழுந்தருளினர். மேலும் கோதண்டராமருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று திருவீதி உலா நிகழ்வும் உற்சாகமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் வீரபாண்டி கிராம பொதுமக்கள் கிருஷ்ண லீலா பிருந்தாவன் பஜனை குழுவினர் ஒன்றிணைந்து பக்தி பாடல்களை பாடினர். மேலும் கோவிலுக்கு வந்த அனைத்து பக்தர்களுக்கும் அபிஷேகங்கள் வழங்கப்பட்டன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!