குடியரசு தினத்தன்று பத்ம விபூஷன், பத்ம பூசன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் https://awards.gov.in என்ற இணையதளத்தில் வரும் ஜூலை.31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் பிரதிக் தயாள் தெரிவித்துள்ளார்
