Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் கலெக்டர் முத்துக்குமரன் தேசிய கொடியேற்றி மரியாதை

கரூரில் 80-வது சுதந்திர தின விழா: ஆட்சியர் முத்துக்குமரன் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினர்.

கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் 80-வது சுதந்திர தின விழா இன்று சிறப்பாக

நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர்

ஏற்றுக்கொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் புறாக்கள் மற்றும் வண்ண பலூன்கள்

பறக்கவிடப்பட்டன.

விழாவில் அரசு அதிகாரிகள், காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து என் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, 38 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியை 23 லட்சத்து 13 ஆயிரத்து 921 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

மேலும் சிறப்பாகப் பணியாற்றிய 26 காவல் துறையினர் , 77 அரசு அலுவலர்கள்மற்றும் தீயணைப்புத் துறையினர், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விழாவின் நிறைவாக பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

error: Content is protected !!