Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கல்லூரி மாணவி தற்கொலை… தூத்துக்குடியில் சோகம்

இளம்பெண் தற்கொலை...3 குழந்தைகள் தவிப்பு... திருச்சி க்ரைம்

தூத்துக்குடியில் கல்லூரி மாணவி ஒருவர் வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன். கூட்டுறவு சொசைட்டி வங்கியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி முத்தரசி (40). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் மதுமிதா (18) தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.காம் படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று மதுமிதா கல்லூரிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். மதியம் சுமார் 1 மணி அளவில் தனது அறைக்குள் சென்ற அவர், கதவை உள்பக்கமாகப் பூட்டிக் கொண்டுள்ளார். சுமார் 2 மணி வரை அவர் கதவைத் திறக்காமல் இருந்ததால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது, அறையிலிருந்த மின்விசிறியில் சேலையால் மதுமிதா தூக்கிட்டுத் தொங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக குடும்பத்தினர் மதுமிதாவை மீட்டு கீழே இறக்கி, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!
Secret Link