சென்னையிலிருந்து ஆலங்குளம் சென்ற சொகுசு ஆம்னி பஸ், உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் முன்னால் சென்ற மற்றொரு ஆம்னி பஸ் மீது பயங்கரமாக மோதியது. முன்னால் சென்ற பஸ் திடீரென பிரேக் போட்டதால் கட்டுப்பாட்டை இழந்த பின்னால் வந்த பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்; ஒருவரின் கால் விரல் துண்டானது. காயமடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதனால் 2 கி.மீ தூரத்திற்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
2 ஆம்னி சொகுசு பஸ்கள் மோதல்- 10 பயணிகள் காயம்
