தொகுதி மறுசீரமைப்பைக் கண்டித்து தமிழ்நாட்டில் நடைபெறும் கருப்புக் கொடி போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வழிமொழிகிறது மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன்.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே திமுக வேட்பாளர் சண். இராமநாதனை ஆதரித்து பிரசாரம் செய்த அவர்
ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் சூழலில் தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கான கூட்டத்தை பிரதமர் மோடி நடத்துவது அரசியல் சூழ்ச்சிகளை உள்ளடக்கியது. நாடாளுமன்றத்தில் விவாதங்கள் சட்டப்படி, முறைப்படி நடைபெற வேண்டும். பெரும்பான்மை இருக்கிற ஒரே

காரணத்துக்காக தென் மாநிலங்களுடைய குரலை பிரதமர் கடந்து செல்லக் கூடாது. இது தென் மாநிலம், வட மாநிலம் என்கிற பிரதேச பாகுபாடு மட்டுமல்லாமல், வாழ்வியல் பாகுபாட்டையும் உருவாக்கி விடும்.
எனவே, இதைக் கண்டித்து தமிழக முதல்வர் அறிவித்திருக்கிற கருப்பு கொடி ஏற்றும் போராட்டத்தை வழி வழிமொழிகிறோம். இது ஜனநாயகத்துக்கான பெரும் போர். நாடாளுமன்ற ஜனநாயகத்தை காப்பதற்காக கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படுகிறதே தவிர, வெறுப்பின் அடையாளம் அல்ல. கருப்பு கொடி என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தை காக்கிற மகத்தான அரசியல் போர். இதைத் தமிழ்கூறும் நல்லுலகம் ஆதரிக்க வேண்டும் என்றார் வீரபாண்டியன்.
இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் கோ. சக்திவேல், மாநிலக் குழு உறுப்பினர் முத்து. உத்திராபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
