மத்திய பா.ஜ.க அரசின் வணிக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை ரயில்வே துறையில் 30 ஆயிரம் பணியிடங்களை அழிப்பதை கண்டித்தும் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினரும் – விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஒன்றிய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தேமத்திய அரசு வணிக எரிவாயு சிலிண்டர் விலையை குறைத்திட வேண்டும், தட்டுப்பாடு இல்லாமல் சிலிண்டர் விநியோகிக்க வேண்டும் என்றும் வீட்டு உபயோக சிலிண்டர் பதிவு செய்த 5 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்றும்ரயில்வேயில் 30 ஆயிரம் பணியிடத்தையும் குறைக்காமல், காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

