Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு எஸ்பி உத்தரவு…

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி, ஒவ்வொரு வாரமும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் அரியலூர் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த 12 மனுதாரர்கள் தங்கள் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ்யிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ், உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!