Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் திமுக தொழிற்சங்கமான டாஸ்மாக் தொ.மு.ச கண்டன ஆர்ப்பாட்டம்

கரூர்-திமுக தொழிற்சங்கமான டாஸ்மாக் தொ.மு.ச கண்டன ஆர்ப்பாட்டம்

கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக தொழிற்சங்கமான டாஸ்மாக் தொ.மு.ச. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தொழிற்பேட்டையில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு திமுக தொழிற்சங்கமான டாஸ்மாக் தொ.மு.ச. சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், காலிப்பாட்டில்களை திரும்பப் பெறும் பணியை அரசு நேரடியாக தனிப் பணியாளர்களை நியமித்து மேற்கொள்ள வேண்டும், டாஸ்மாக் கடைகளுக்கு வரும் மதுபான பெட்டிகளை இறக்கும் கூலியை நிர்வாகமே ஏற்க வேண்டும், ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் தொ.மு.ச. நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். அவர்களுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

error: Content is protected !!