Skip to content
Home » இந்தியர்களின் நிறம் பற்றிய பேச்சு…. காங். நிர்வாகி சாம் பிட்ரோடா ராஜினாமா

இந்தியர்களின் நிறம் பற்றிய பேச்சு…. காங். நிர்வாகி சாம் பிட்ரோடா ராஜினாமா

காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவர் சாம் பிட்ரோடா . இவர், சமீபத்தில் இந்தியாவின் பன்மைத்துவம் குறித்தும், இந்தியர்கள் குறித்தும் பேசியிருந்தார். அப்போது அவர்,
கிழக்கில் மக்கள் சீனர்கள் போலவும், மேற்கில் அரேபியர்களைப் போலவும், தெற்கில் ஆப்பிரிக்கர்களாகவும் உள்ளனர் எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் கூறுகையில், இந்தியாவில் அங்கும் இங்கும் சில சண்டைகளை தவிர, மக்கள் ஒன்றாக மகிழ்ச்சியாக வாழக்கூடிய சூழல்தான் 75 ஆண்டுகளாக இந்தியாவில் இருந்தது.இந்திய மக்கள் பல்வேறு மொழிகள், மதங்கள், உணவு, பழக்கவழக்கங்களை மதிக்கிறார்கள் “அதுதான் நான் நம்பும் இந்தியா, இங்கு அனைவருக்கும் ஒரு இடம் இருக்கிறது, எல்லோரும் கொஞ்சம் சமரசம் செய்து கொள்கிறார்கள்” என்று பிட்ரோடா கூறினார்.

இந்தியர்களின்  நிறம்  குறித்து சாம் பிட்ரோடா பேசிய பேச்சை, பாஜக  தனது தேர்தல் பிரசாரத்திற்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டது.  இந்தியர்களின் நிறத்தை  பற்றி பேசியதை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.   தென்னிந்தியர்களின்  நிறம் பற்றி விமர்சித்த காங்கிரசை கண்டித்து   தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரசுடன் கூட்டணியை முறித்துக்கொள்வாரா என்று கேட்டார்.

இந்த நிலையில்  காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்  சாம் பிட்ரோடா பேச்சுக்கும் காங்கிரசுக்கும்  சம்பந்தம் இல்லை. அது அவருடைய சொந்த கருத்து என்று கூறினார். இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் பிரிவு தலைவர் பொறுப்பில் இருந்து சாம்பிட்ரோடா ராஜினாமா செய்தார். சாம்பிட்ரோடா பேசியவை அடுத்தடுத்து சர்ச்சைக்குள்ளான நிலையில் கட்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக எழுதிய கடிதத்தை கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பினார். சாம் பிட்ரோடாவின் ராஜினாமாவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உடனடியாக ஏற்றுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!