Skip to content
Home » ராகுல் பேசும்போது சபாநாயகரை காட்டிய சன்சாட் டிவி…. காங்கிரஸ் கண்டனம்

ராகுல் பேசும்போது சபாநாயகரை காட்டிய சன்சாட் டிவி…. காங்கிரஸ் கண்டனம்

  • by Senthil

பாஜ அரசின் மீது  இந்தியா கூட்டணி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று மதியம் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக ராகுல் காந்தி பேசினார். அப்போது பாஜகவினர் ரகளையில் ஈடுபட்டு அவரை பேசவிடாமல் தடுக்க முற்பட்டனர். ஆனாலும் ராகுல் மொத்தம் 15 நிமிடம் 42 வினாடிகள் பேசினார்.

அப்போது மக்களவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் சன்சாத் டிவி,  ராகுல் பேச்சை காட்டுவதை விட சபாநாயகர் ஓம்பிர்லாவை காட்டுவதில் தான் முனைப்பு காட்டியது. ராகுல் பேசிய  15 நிமிடத்தில் 11 நிமிடம் 8 வினாடி சபாநாயகரையே காட்டியது.  வெறும் 4 நிமிடங்கள் மட்டுமே ராகுல் பேசுவதை ஒளிபரப்பு செய்தது.

சன்சாத் டிவியின் இந்த  செயலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!