Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை காளகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்- பக்தர்கள் தரிசனம்

தஞ்சை காளகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்- பக்தர்கள் தரிசனம்

தஞ்சை மாவட்டத்தில் தென் காளஹஸ்தி என்று போற்றப்படும்
அருள்மிகு ஞானாம்பிகை அம்மன் சமேத அருள்மிகு காளகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது,

15 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ட்ரோன் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

தஞ்சை மாவட்டம் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகில் சப்தரிஷி நத்தம் கிராமத்தில் அருள்மிகு ஞானாம்பிகை அம்மன் சமேத அருள்மிகு காளகஸ்தீஸ்வரர் திருக்கோயில் உள்ளது,

தென்காளஹஸ்தி என்று போற்றப்படும் இக்கோயிலில் தளவாய் பாளையம் குளிச்சப்பட்டு, கத்தரி நத்தம், மருங்கை ஆகிய நான்கு கிராமங்களை உள்ளடக்கிய சிங்கவள நாட்டில் அமைந்து உள்ளது.

இக்கோவில் கும்பாபிஷேகம் 15 ஆண்டுகளுக்கு பிறகு நடைப்பெற்றது.

இதனை ஒட்டி கடந்த 29ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் சிறப்பாக தொடங்கியது,

இன்று நான்காம் கால யாக சாலை பூஜைகள், மஹா பூர்ணாஹுதி மஹா தீபாரதனை, யாத்ரா தானத்துடன் நிறைவு பெற்றது

தொடர்ந்து யாகசாலை மண்டபத்தில் இருந்து மங்கள வாத்தியங்கள் இசையுடன் கடம் புறப்பட்டது. சிவாச்சாரியார்கள் புனித நீரை கோபுர கலசத்திற்கு எடுத்து சென்றனர்,

விமான கோபுரம் மற்றும் பரிவார கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து புனித நீர் கோபுர கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டன.

வெகு சிறப்பாக நடைபெற்ற இக்கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ராட்சத ட்ரோன் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டன.

error: Content is protected !!