Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் அருகே கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து… போக்குவரத்து பாதிப்பு..

கரூர் மாவட்டம், புகழூரில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு பேப்பர் லோடு ஏற்றிக்கொண்டு, கண்டெய்னர் லாரி ஒன்று கரூரிலிருந்து – மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தபோது, காக்காவடி பகுதியில் முன்னாள் சென்ற லாரி மீது மோதி கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் காயமடைந்ததில், ஆம்புலன்ஸ் மூலம் அவர் மீட்கப்பட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். தேசிய

நெடுஞ்சாலையில் கண்டெய்னர் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்து காரணமாக சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நான்கு வழி சாலை என்பதால் மாற்று வழியில் தற்போது வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கண்டைனர் லாரி கவிழ்ந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!