கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துப் பொருட்களின் கவர்களில், தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் விவரங்கள் அச்சிடப்பட்டிருப்பது தற்போது சர்ச்சை.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திண்டுக்கல், நாமக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துப் பொருட்களின் கவர்களில், தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் விவரங்கள் அச்சிடப்பட்டிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை தமிழ் மொழியில் மட்டுமே விவரங்கள் அச்சிடப்பட்ட மருந்து கவர்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்தி மொழியும் இடம்பெற்றிருப்பது நோயாளிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை பின்பற்றப்பட்டு வரும் நிலையில், கரூர் அரசு மருத்துவமனையில் மருந்து கவர்களில் இந்தி மொழி இடம்பெற்றது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மேலும், இந்தி மொழி இடம்பெற்றதற்கான காரணம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கவில்லை.
ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலைகளில் ஹிந்தி பெயர் எழுதி இருந்த சம்பவம் சர்ச்சை எழுந்த நிலையில் தற்போது மருத்துவமனையிலும் இதுபோன்று நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
