Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆசிரியை கொலை…. மாணவர்களுக்கு கவுன்சலிங்….. அமைச்சர் மகேஸ் தகவல்

தஞ்சை மாவட்டம்  மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று ஆசிரியை ரமணி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  மகேஸ் பொய்யாமொழி  நேற்று  சம்பவம் நடந்த பள்ளிக்கு வந்தார். பின்னர் ஆசிரியை வீட்டுக்கும் சென்று   ஆசிரியை உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.  குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.   பின்னர்   அமைச்சர் மகேஸ் கூறியதாவது:

மல்லிப்பட்டினம் பள்ளிக்கு  விடுமுறை விடப்படுகிறது. இனி 25ம் தேதி தான் பள்ளி திறக்கும்.  பள்ளியில்

கண்காணிப்பு காமிரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.  இந்த கொலையாளிக்கு வக்கீல்கள் யாரும் வாதாட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற சம்பவங்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும். பள்ளி திறந்த உடன் மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் மகேஸ் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!