Skip to content

சாலையில் சுற்றிதிரியும் மாடுகள்… கவனிப்பார்களா? அதிகாரிகள்

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகர பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களிலும் முறையான பராமரிப்பு இல்லாமல் மாடுகளை உரிமையாளர்கள் அவிழ்த்து விட்டு காரணத்தால் முக்கிய பிரதான சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரியும் அவலம் ஏற்பட்டுள்ளது.

உரிமையாளர்கள் பசு மாடுகள் மற்றும் கன்று குட்டிகள் உள்ளிட்டவையை அவிழ்த்து விட்டுவதன் காரணமாக முக்கிய சாலைகளிலின் நடுவே நின்று கொண்டும் படுத்து கொண்டும் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது.

இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பயணிக்க முடியாமல் விபத்துக்குள்ளாகும் சூழ்நிலையும்

ஏற்படுகிறதுஎன அச்சம் தெரிவிக்கின்றனர். இது எத்தனை முறை நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் செவிடனுக்கு சங்கு ஊதியது போல நடவடிக்கை எடுக்காமல் நகராட்சி அதிகாரிகள் மெத்தனம் காட்டுகின்றனர்.

இதுகுறித்து திருப்பத்தூர் நகராட்சி நிர்வாகம் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது கால்நடைகளை பிடித்துச் சென்று உரிமையாளர்கள் மீது அபராதம் செலுத்த வேண்டும்.

என திருப்பத்தூர் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

error: Content is protected !!