திருச்சி மாவட்டத்தில் பயிர் சாகுபடி பரப்புகளை பயிர் வாரியாக மொபைல் செயலி பயன்படுத்தி மின்னணு முறையில் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம், திருச்சி மாவட்டத்தில் நடப்பு காரிப் பருவத்தில் 15,02,312 உட்பிரிவுகளில் இதுவரை 43,820 உட்பிரிவுகளுக்கு மின்னணு பதிவு நிறைவு பெற்றுள்ளது என திருச்சி மாவட்ட வேளாண்மை இயக்குனர் சாந்தாமணி தெரிவித்துள்ளார்.
