Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சூறாவளிக் காற்று எச்சரிக்கை- விசைப்படகுகள் நாளை கடலுக்கு செல்லத் தடை

தூத்துக்குடியில் கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் நாளை (18.08.2026) ஒரு நாள் மட்டும் விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்பிடித்துறைமுக மேலாண்மை அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:கடலில் காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வரையிலும், அதிகபட்சமாக 65 கி.மீ. வரையிலும் வீசக்கூடும்.  இதன் காரணமாக, பாதுகாப்பு நடவடிக்கையாக நாளை (18/08/2026) ஒரு நாள் மட்டும் விசைப்படகுகள் தொழிலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

மீனவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அனைத்து விசைப்படகு உரிமையாளர்களும், மீனவர்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

error: Content is protected !!