Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைவு!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் மாதம் தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகிறது. அதே போல வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை மாதம் இரண்டு முறை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் முதல் நாளிலேயே எரிவாயு சிலிண்டர் நிலவரம் அறிவிக்கப்பட்டுவிடும்.  அந்தவகையில் 14.2 கிலோ எடைகொண்ட சமையல் சிலிண்டர் விலை கடந்த பிப்ரவரி மாதம் ரூ.6.50 குறைந்தது. அதன்பிறகு விலை மாற்றமின்றி விற்பனையாகி வந்தது.

இந்த நிலையில் ஜூலை 1ம் தேதியான இன்று சிலிண்டர்கள் விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  அதன்படி இன்று  வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைந்துள்ளது.   கடந்த மாதம் ரூ.1,881க்கு விற்பனையான வணிக சிலிண்டர் இந்த மாதம் ரூ. 58 குறைந்துள்ளது., அதன்படி சென்னையில் 19.5 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் ரூ.1,823க்கு விற்பனையாகிறது.  வீட்டு பயன்பாட்டிற்கான 14.2 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.818.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

error: Content is protected !!