Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஈரோடு…மொடக்குறிச்சியில் ரூ.89 லட்சம் பறிமுதல்

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்குவந்தது. உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் நகை, பணம் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். வாக்காளர்களுக்கு பணம் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்டறிய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட செலம்பங்கவுண்டன் பாளையத்தில் ரூ.89.92 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அரவிந்தன் என்பவரிடம் காரில் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.89.92 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றினர். அதன்பின்பு கைப்பற்றப்பட்ட பணத்தை வருமானவரித் துறையிடம் ஒப்படைத்தனர்.

error: Content is protected !!