இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா உடல்நலக்குறைவால் சென்னை ராஜிவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் சோர்வு காரணமாக அவருக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அமைச்சர்கள் நிர்மல்குமார் மற்றும் அருண்ராஜ் ஆகியோர் டி.ராஜாவை இன்று காலை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அப்போது சிபிஐ தேசியக் குழு உறுப்பினர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், டி.ராஜாவின் மகளும் தேசியக் குழு உறுப்பினருமான அபராஜிதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
