கடந்த 72 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொளத்தூர் MLA வி.எஸ்.பாபு இன்று காலமானதை அடுத்து, தமிழக முதல்வர் விஜய்யின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த வி.எஸ்.பாபு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்ததை தொடர்ந்து, அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், வி.எஸ்.பாபு மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, முதல்வர் விஜய்யின் நாளைய திருச்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வி.எஸ்.பாபு மறைவு: முதல்வரின் நிகழ்ச்சிகள் ரத்து
