ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் ரூ.7 கோடி ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்ததுடன், பணம் தராவிட்டால் அவரும் அவரது மகளும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் கொல்லப்படுவார்கள் என்று தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. திலக் நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜர்னைல் சிங்கிற்கு வந்த இந்த மிரட்டல் செய்தி குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், பஞ்சாப் காவல் துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையில் தீவிர விசாரணையை துவங்கியுள்ளனர்.
ரூ.7 கோடி கேட்டு கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல்- போலீசில் புகார்
