இந்நிலையில் கடைசி நேரக் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக, தீபாவளிக்கு முந்தைய நாளான அக். 30ம் தேதியும் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனம் மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளித்து துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், பொதுப் பணித் துறை நிறுவனங்களுக்கு விடுமுறை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 1ம் தேதி புதுச்சேரி விடுதலை நாள் என்பதால் ஏற்கனவே விடுமுறை; நவம்பர் 2ம் தேதி கல்லறை நாள், 3ம் தேதி ஞாயிற்று கிழமை என்பதால் மொத்தமாக அக்டோபர் 30ல் இருந்து நவம்பர் 3ம் தேதி வரை 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்.30ம் தேதி விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நவம்பர் 16 சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
