Skip to content
Home » தீபாவளி ….2 நாளில் ரூ.467 கோடி மது விற்பனை

தீபாவளி ….2 நாளில் ரூ.467 கோடி மது விற்பனை

தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் கடந்த இரண்டு நாட்களில் ரூ.467.63 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளது. நவம்பர் 11-ந்தேதி ரூ.221 கோடிக்கும் தீபாவளி தினமான நேற்று ரூ.246 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது. தீபாவளிக்கு முந்தைய நாளில் மதுரை மண்டலத்திலும், தீபாவளியன்று திருச்சி மண்டலத்திலும்அதிக அளவில் மதுவிற்பனை நடைபெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக மதுரை  மண்டலத்தில் அதிக விற்பனை  நடந்துள்ளது.

நவம்பர் 11-ல் மண்டல வாரியாக நடைபெற்ற மது விற்பனை விவரம்:- மதுரை – ரூ.52.73 கோடி, சென்னை – ரூ.48.12 கோடி ,கோவை – ரூ.40.20 கோடி,திருச்சி – ரூ.40.02 கோடி- சேலம் – ரூ.39.78 கோடி

நவம்பர் 12-ல் மண்டல வாரியாக நடைபெற்ற மது விற்பனை விவரம்:- திருச்சி – ரூ.55.60  கோடி, சென்னை – ரூ.52.98, மதுரை – ரூ.51.97 ,கோடி சேலம் – ரூ.46.62 , கோவை – ரூ.39.61 கோடி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!