Skip to content
Home » டில்லியில் அமித்ஷாவுடன் அண்ணாமலை சந்திப்பு…நிர்வாகிகள் கூட்டம் ரத்து..

டில்லியில் அமித்ஷாவுடன் அண்ணாமலை சந்திப்பு…நிர்வாகிகள் கூட்டம் ரத்து..

  • by Senthil

அதிமுக கூட்டணியை முறித்த நிலையில்  தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று டில்லி சென்றார். இன்று அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை   அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது அதிமுக கூட்டணி முறிவுக்கும், தனது பேச்சுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்.  அதை   ஏற்க மறுத்த அமித்ஷா,  தேர்தல் வரையிலும் அதிமுகவை இனி கடுமையாக விமர்சிக்க கூடாது என கண்டித்தாராம்.

அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை பாஜக பக்கம் திருப்பி கொண்டு வாருங்கள். கூட்டணி தலைவர்களை அனுசரித்து பேசுங்கள் என அட்வைஸ் செய்தாராம்.  அதிமுக கூட்டணியை முறித்தது பாஜகவுக்கு பெரும் பாதிப்பு என  நமது நிர்வாகிகள்  அறிக்கை கொடுத்து உள்ளனர்.  உங்கள் பேச்சு தான் கூட்டணி முறிவுக்கு காரணம் என்றும் கூறி உள்ளனர். அதற்கு உங்கள் பதில் என்ன என்று கேட்டு உள்ளார்.

இதற்கு அண்ணாமலை கூறிய பதிலை ஏற்க மறுத்த  அமித்ஷா இனி அதிமுக குறித்து பேசக்கூடாது என கண்டித்ததாகவும் கூறப்படுகிறது  அத்துடன் அமைப்பு செயலாளர் சந்தோஷ்  என்பவரையும் சந்தித்த அண்ணாமலை விளக்கம் அளித்தாராம். இந்த நிலையில் சென்னையில் இன்று நடைபெறுவதாக இருந்த நிர்வாகிகள் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!