திருச்சி முசிறி தொப்புலான்பட்டியை சேர்ந்த தங்கதுரை என்பவரின் மனைவி ஆர்த்தி(21). இவர் தனது இரண்டாவது பிரசவத்திற்காக தும்பலம் ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு பிரசத்தில் பெண் குழந்தை பிறந்தாலும், அது இறந்து விட்டது. இந்நிலையில் ஆர்த்தியின் உடல்நிலை ஆபத்தான அளவிற்கு சென்றதால் அவர் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் உயிரிழந்ததாக தொிவித்தனர். இதனை தொடர்ந்து உடலை கைப்பற்றிய முசிறி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
