Skip to content
Home » பல லட்சம் ரூபாய் நோட்டுகளால் பகவதி அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம்….

பல லட்சம் ரூபாய் நோட்டுகளால் பகவதி அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம்….

  • by Senthil

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கடைவீதியில் உள்ள அருள்மிகு பகவதி அம்மன் கோயில் திருவிழாவில் பல லட்சம் ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம். திரளான பக்தர்கள் ஒம் சக்தி பராசக்தி பக்தி பக்தி முழங்க தரிசனம் செய்தனர்.

மண்ணச்சநல்லூர் கடைவீதியில் உள்ள அருள்மிகு பகவதி அம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். அதன்படி 123 ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு இந்தாண்டுக்கான பகவதி அம்மன் திருவிழாவானது கடந்த டிச.28ம் தேதி கம்பம் நடுதலுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து முதல் நாள் பகவதி அம்மன் இரண்டாம் நாள் வெங்கடாஜலபதியுடன் பத்மாவதி, மூன்றாம் நாள் ஆதிபராசக்தி, நான்காம் நாள்

ராஜராஜேஸ்வரி, ஐந்தாம் நாள் வெண்ணனத் தாழி கிருஷ்ணர், ஆறாம் நாள் காமாட்சி அம்மன், ஏழாம் நாள் வளைகாப்பு அம்மன் அலங்காரம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக ரூ 10, 20, ௹ 50, ரூ 100, ரூ 200, ௹ 500 என பல லட்சம் ரூபாய் நோட்டுகளால் தோரணம் அமைத்து பணத்தால் அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அபிஷேக மற்றும் தீபாரதனை நடைபெற்றது. தனலட்சுமி அலங்காரம் பூஜையில் கலந்து கொள்வதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டு பகவதி அம்மனை தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!