Skip to content
Home » பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பள்ளி விடுதியில் பெண் ஊழியர் மர்ம சாவு

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பள்ளி விடுதியில் பெண் ஊழியர் மர்ம சாவு

  • by Senthil

பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பள்ளியில் விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் காந்தி நகரை சேர்ந்த சுபா ஆடலரசி (வயது 26). என்பவர் அலுவலக உதவியாளராகவும், பள்ளி வளாகத்தில் உள்ள பெண்கள் விடுதியில் காப்பாளராகவும் அங்கேயே தங்கி பணிபுரிந்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் நடந்த ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அவரை மதியத்திற்கு பிறகு காணவில்லை. இந்த நிலையில் நேற்று மதியம் பள்ளியில் பணிபுரியும் பெண் துப்புரவு பணியாளர் ஒருவர், விடுதியை சுத்தம் செய்வதற்காக கதவை திறந்து பார்த்தபோது, சுபா ஆடலரசி துப்பட்டாவால் மின் விசிறியில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.

இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் அங்கு சென்று சுபா ஆடலரசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவ இடத்தில் இருந்து ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், தீராத மன உளைச்சல் காரணமாகவும், உடல்நிலை சரியில்லாத காரணத்தினாலும், நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். இதற்கு வேறு யாரும் காரணம் இல்லை என்று சுபா ஆடலரசி கைப்பட எழுதி, நேற்று முன்தினம் தேதியிட்டு கையொப்பமிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சுபா ஆடலரசி உறவினர் ஒருவரை காதலித்து வந்ததாகவும்,அவருக்கு தற்போது வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்ததாகவும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

இந்நிலையில் சுபா ஆடலரசி தற்கொலையில் மர்மம் உள்ளதாக அவரது தாயார் அமுதா பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.

அந்த புகாரியில் கடந்த 16-ம் தேதி என் மகன் திருமணத்திற்கு விடுமுறை எடுத்துக்கொண்டு ஊருக்கு வந்தார். 20 -ம் தேதி என் மகன் திருமணம் முடிந்தது. இந்நிலையில் என் மகளுக்கு 20-ம் தேதி தொடர்ந்து செல்போன் அழைப்புகள் வந்து கொண்டே இருந்தது .அதனால் 21-ம் தேதி பெரம்பலூர் வந்துவிட்டதாகவும் 23- ம் தேதி எனது மூத்த மகள் சாமுண்டீஸ்வரியிடம் பேசிய பிறகு என் மகளிடமிருந்து எந்த போன்காலும் வரவில்லை இந்நிலையில் நேற்று மதியம் பெரம்பலூர் காவல் நிலையத்திலிருந்து போன் வந்தது .அதில் என் மகள் சுபா ஆடலரசி பணி புரியும் பள்ளியில்  தற்கொலை செய்து கொண்டதாக கூறினர்.

ஆனால் என் மகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கோழை அல்ல. இதில் ஏதோ மர்மம் உள்ளது என் மகளுக்கு தொடர்ந்து போன் செய்தது யார் ?என் மகளை மட்டும் பள்ளி நிர்வாகம் போன் செய்து அழைத்ததற்கு காரணம் என்ன.  என் மகள் இறப்புக்கு சரியான நீதி வேண்டும் என அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

இதனால் இந்த சம்பவம் தற்போது பெரம்பலூரில் பரபரப்பை பெரும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!