Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டோனிக்கு காயம்… இன்று விளையாடுவாரா?

ஐபிஎல் போட்டி இன்று  ஆமதாபாத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிள் மோதுகிறது.   இந்த நிலையில்  சென்னை அணி கேப்டன்  டோனிக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. எனவே அவர் இன்றைய முதல் போட்டியில் விளையாடமாட்டார் என்ற  செய்தி பரவியது.

இது குறித்து  சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியதாவது:   டோனிக்கு கால் பகுதியில் ஏற்பட்ட லேசான காயம் காரணமாக ஆமதாபாத்தில் நடந்த பயிற்சியில் டோனி பங்கேற்கவில்லை.

இதனால் முதல் போட்டியில் டோனி பங்கேற்க மாட்டார் என தகவல்கள் வெளியானது.  முதல் போட்டியில் டோனி கண்டிப்பாக  விளையாடுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை உறுதி செய்யும் விதமாக, தல பத்ரம் என சென்னை அணி ட்வீட் செய்துள்ளது. எனினும், காயம் காரணமாக ஒருவேளை டோனி ஆடாவிட்டால் கான்வே அல்லது ராயுடு கீப்பிங் செய்வார்கள் என்றும் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!