Skip to content
Home » வைர கற்களை தேடி… தெருக்களை கூட்டி பெருக்கி குப்பை அள்ளிய மக்கள்

வைர கற்களை தேடி… தெருக்களை கூட்டி பெருக்கி குப்பை அள்ளிய மக்கள்

குஜராத்தின் சூரத் நகரில் வரச்சா பகுதியில் சிறிய பஜார் ஒன்று உள்ளது. இதில், அந்த வழியே நபர் ஒருவர் சென்றுள்ளார். வைர வியாபாரி ஒருவரின் கோடிக்கணக்கான மதிப்பிலான வைர கற்கள் தவறுதலாக அந்த தெருவில் விழுந்து விட்டன என தகவல் பரவியது.இதனை அறிந்ததும், அந்த பகுதியில் கும்பல் கூடியது. அவர்கள் வந்த வேலையை விட்டு, விட்டு தெருவில் கிடக்கும் வைர கற்களை தேட தொடங்கினர். சந்தையில் இருந்த குப்பைகளை எல்லாம் சிலர் கூட்டி, பெருக்கி அலசினர்.

இதில், ஒரு சிலருக்கு அதிர்ஷ்டம் கைகூடியது. சிலருக்கு வைர கற்கள் கிடைத்துள்ளன. ஆனால் அதன்பின்னரே அவை அமெரிக்க வைரங்கள் என தெரிய வந்துள்ளது. இதனால், சுற்றியிருந்தவர்கள் தேடலை கைவிட்டனர். இதுபற்றி தெருவில் வைரங்களை தேடியவர்களில் ஒருவரான பன்சேரியா என்பவர் கூறும்போது, ஒருவருக்கு வைரம் கிடைத்தது. ஆனால், அது ஒரு போலியான வைரம் என்று பின்பே தெரிந்தது. அது அமெரிக்க வைரம். கவரிங் நகை அல்லது சேலையில் வேலைப்பாடுகள் செய்ய பயன்பட கூடிய வைரம் ஆகும். பொதுமக்களை கவர வேண்டும் என்பதற்காக எவரோ சிலர் பிராங்க் விளையாட்டில் ஈடுபட்டு உள்ளதுபோன்று தோன்றுகிறது என்று கூறினார். இந்த தேடல் சம்பவம் பற்றிய வீடியோ ஒன்றும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!