டில்லியில் இருந்து சென்னைக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் எம்.பி., கனிமொழி மற்றும் 188 பயணிகளுடன் வந்த விமானம், சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க ஓடுபாதையை நெருங்கியபோது திடீரென தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் வானில் உயரப் பறந்தது. விமானியின் சாதுரியத்தால் வானில் சில நிமிடங்கள் வட்டமடித்த அந்த விமானம், பின்னர் பத்திரமாகத் தரை இறக்கப்பட்டது. இந்தச் சம்பவம் பயணிகளிடையே சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
கனிமொழி சென்னை வந்த விமானம் தரையிறங்குவதில் சிக்கல்
