Skip to content
Home » டிஐஜி தற்கொலை ஏன்? டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்

டிஐஜி தற்கொலை ஏன்? டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்

கோவை சரக டி.ஐ.ஜி.யாக கடந்த ஜனவரி மாதம் முதல் பதவி வகித்து வந்தவர் விஜயகுமார். இவர் இன்று காலையில் தனது வீட்டில் இருந்த நிலையில் திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது உடல் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வைக்கப்பட்டுள்ளது. இவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து தெரியவில்லை. கோவை அரசு மருத்துவமனையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

டிஐஜி விஜயகுமார் தற்கொலை விவகாரம் தொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் கூறியதாவது: கோவை சரக டிஐஜி விஜயகுமாரின் மரணம் மிகவும் வருந்தத்தக்கது. கடந்த சில தினங்களாகவே மன உளைச்சலில் இருந்த விஜயகுமாருக்கு ஐ.ஜி.சுதாகர் நேற்று முன் தினம் கவுன்சிலிங் அளித்துள்ளார்.  அவர் உயிரை மாய்த்து கொண்டதற்கு அலுவலக பிரச்சினைகளோ, வேலைசுமையோ காரணமில்லை. இது குறித்து ஐ.ஜி.சுதாகர் தலைமையில் காவல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!