Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திண்டுக்கல்லில் தப்பியோடிய ரவுடியை சுட்டுபிடித்த போலீசார்

 திண்டுக்கல் அருகே கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி ரிச்சர்ட் சச்சின் என்பவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். பஸ் ஸ்டாண்ட் அருகே இர்பான் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆயுதங்களைப் பதுக்கி வைத்த இடத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்ற போது, போலீஸ்காரர் அருணை ரிச்சர்ட் சச்சின் தாக்கியதாக சொல்லப்படுகிறது. பின்னர், அங்கிருந்து தப்பியோட முயன்றதாகவும், அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ரிச்சர்ட் சச்சின் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல, ரவுடி தாக்கியதில் காயமடைந்த போலீஸ்காரர் அருணும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!