Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மதுரைக்கு நேரடி விமான சேவை….. சிங்கப்பூர் அமைச்சர் ….முதல்வரிடம் கோரிக்கை

புதிய முதலீடுகளை ஈர்த்திடவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும் அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் பயணம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து  சிங்கப்பூர் உள்துறை மந்திரி சண்முகத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு மேற்கொண்டார். இந்த சந்திப்பின் போது சிங்கப்பூர் உள்துறை மந்திரி, இணைய பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்துதல், உள்ளிட்டவை குறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கலந்துரையாடினார்.மேலும், சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கு நேரடி விமான சேவை தொடங்க முதல் அமைச்சரிடம் சண்முகம் கோரிக்கை வைத்தார். இது தொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று கூறிய முதல் அமைச்சர், சென்னையில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க சண்முகத்திற்கு அழைப்பு விடுத்தார். சிங்கப்பூர் பயணத்தை நிறைவு செய்து, இன்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் புறப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!