இயக்குநர் சங்கத்துக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். இயக்குநர் சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் தங்களது குழந்தைகளின் கல்வி செலவுக்கு கஷ்டப்படுவதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கேள்விப்பட்டுள்ளார். இதனை அடுத்து இயக்குநர் சங்கத்தின் உறுப்பினர்களை அழைத்து வருடந்தோறும் 10 லட்ச ரூபாய் நிதியுதவி அளிப்பதாக உறுதியளித்திருக்கிறார். மேலும், இதன் முதற்கட்டமாக நேற்று (செப்.13) 5 லட்ச ரூபாய்க்கான காசோலையை இயக்குநர் சங்கத்தின் தலைவர் ஆர்.வி.உதயகுமாரிடம்
