Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாற்றுத்திறனாளிகளிடம் உயிர் வாழ்நாள் சான்று பெற வேண்டாம்- அரசு அறிவிப்பு

 மாற்று திறனாளிகள் நல ஆணையர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 6 வகையான பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்படுகிறது. அனைத்து மாவட்ட பயனாளிகளுக்கும் மாதம் 5ம் தேதி அன்று பயனாளிகளின் வங்கிக்கணக்குகளில் நேரடியாக உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மனவளர்ச்சி குன்றியவர்கள், கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள், தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதாந்திர உதவிபராமரிப்பு உதவி தொகை வழங்கப்படுகிறது.

இதே போல் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், பார்க்கின்சன் நோய், தண்டுவட மரப்பு நோய் ஆகிய நாட்பட்ட நரம்பியல் பாதிப்பிற்கு உள்ளான நபர்கள், தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், புற உலக சிந்தனையற்ற மதி இறுக்கம் உடையவர்களுக்கான மாதாந்திர பராமரிப்பு தொகை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் பராமரிப்பு உதவி தொகை பெறும் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து அவர்களின் வாழ்நாள் சான்றிதழை பெற வேண்டாம் என அனைத்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது, “இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!